Latest News
Friday, August 9, 2013

குருவி, சுறாவை மிஞ்சிய தலைவா - விமர்சனம்

அண்ணா..வணக்கம்ணா...அது என்னண்ணா உங்களை புரிஞ்சுக்கவே முடியலண்ணா..நடிச்சா துப்பாக்கி மாதிரி ஹிட்டு கொடுக்குறீங்க..இல்லாட்டி, குருவி, சுறா..அப்புறம் இந்தப்படம் அப்படின்னு சூரமொக்கைகளை அடிச்சுவிடுறீங்க..எதுவோ..ஆனா, இன்னைக்கு நான் செலவழிச்ச 10 டாலரை திருப்பி கொடுத்துருணும்..இல்லாட்டி, தியேட்டர் முன்னாடி மறியல் பண்ணுவேன்னா..

ஆனா ஒன்னுண்ணா, உங்களுக்கு எதிரி வெளியில இருந்தெல்லாம் இல்லீங்கண்ணா...கொஞ்சம் எட்டி பார்த்தீங்கண்ணா உங்களுக்கே தெரியும்..

சரீங்கண்ணா..டைரக்டரு விஜய் கூட எம்புட்டு நேரம் பேசிருப்ப்பீங்க..கதைன்னு ஏதாவது சொன்னாரா...பயபுள்ள சொல்லியிருக்க மாட்டாருண்ணே..தளபதி, நாயகன், தேவர் மகன்ன்னு மூணு சீ.டியை கொடுத்துருப்பாரே..என்னது எப்படி தெரியுமா..அதுதான் தியேட்டருல்ல கொடுத்தாவுகளே...

அது எப்படிங்கண்ணா, அந்த டைரக்டரு, மனசாட்சியே இல்லாம ஒரு சீனு கூட புதுசா இல்லாம, எல்லா படத்துல இருந்து மூணு, மூணு சீனு எடுத்து படம் பண்ணியிருக்காரு..ஆனா ஒன்னுண்ங்கனா, ரொம்ப நாளைக்கப்புறம், முழுநீள காமெடி படம் பார்த்த திருப்தின்னா..இடைவேளை வரைக்கும், சந்தானம்..இடைவேளைக்கு அப்புறம், தலைவர் வேடத்தில் நீங்க..பிச்சிப்புட்டீங்க..விழுந்து விழுந்து சிரிச்சோம்னா பார்த்துங்களேன்..

படத்தில ஒரு சீனு வருதுண்ணே..ஆஸ்பத்திரியில படுத்து கிடக்குற ஏழைங்களுக்கு, பொன்வண்ணன் குடிக்க ஏதோ கொடுப்பாருண்ணே..அதுக்கு அவிங்க.."இது வேணாம், கொஞ்சம் விஷம் கொடுங்க" அப்படின்னு கேட்பாய்ங்கண்ணே..வீட்டுக்கு வந்து கழுத, அந்த விஷ பாட்டில தேடுறேன்..கிடைக்கவே இல்லீங்கண்ணா..

ஆங்க்..அப்புறங்கன்னா..கதையை ..சொல்லலின்னா, பசங்க கோவிச்சுருவாய்ங்க..சொல்லிறேன்..அதாவது, நீங்க ஆஸ்திரேலியாவில இருக்கீங்க.உங்க அப்பா சத்யராஜ், மும்பையில பெரிய டான்..துரோகம் பண்ணி உங்கள மும்பைக்கு கூட்டி வந்து சத்யராஜ கொன்னுருறாய்ங்க..அப்புறம் அந்த இடத்தை புல்லப் பண்ண, நீங்க தலைவராகி, மிச்சம் சொச்சம் தியேட்டருல இருக்குறவய்ங்களையும் சேர்த்து கொல்லுறீங்க...

ஆனா ஒன்னுண்ணே..இதுவரைக்கும் பாட்டு சீனுக்குதான் தம்மடிக்க வெளியே போய் கேள்விப்பட்டிருக்கேன்..இடைவேளைக்கு அப்புறம், தியேட்டருல இருக்குற அம்புட்டு பேரும் தியேட்டருல இருந்து இன்னைக்குதான்னா பார்க்குறேன்..செம வியாபரம்ணா.. அதுவும், ஒரு வீடியோ கேசட்டுக்காக, நீங்களும், வில்லனும், நடத்துற கூத்து இருக்கே..அண்ணா..அங்க புரியலண்ணா..வீட்டுக்கு வந்து யோசித்தப்பதான் தெரிஞ்சது..அண்ணா.....முடியலங்கண்ணா...

இதுல பக்கத்துல இருக்குற பயபுள்ள, அமலா பாலை பார்த்தவுடேனே., "ராசா, நம்ம குருவித்துறையில கொய்யாப்பழம் விக்குற பொண்ணு மாதிரி இருக்குதுங்குறாண்ணே.." என்னா நக்கலு பாருங்கண்ணா..அப்புறம், என்னண்ணா, மும்பையில இருக்குற எல்லாருமே இந்திய தவிர எல்லாத்தையும் பேசுறாய்ங்க..அதுவும், மஹாராஷ்டிர மக்களுக்கு, நீங்க கொடுத்த அறிவுரை ஒன்னு இருக்கே..அப்ப தூங்குனவய்ங்க தான்னா..

அண்ணா...ஒரு வேண்டுகொள்னா..படத்துல ஏத்தி விடுற மாதிரி அரசியலுக்கு கண்டிப்பா வந்துருங்கன்னா..சுப்ரமணிய சாமிக்கு அப்புறம் அந்த இடம் இன்னும் காலியாத்தாங்கன்னா இருக்கு...

தலைவா - நாலு கொள்ளி கட்டைய நம்ம காசுபோட்டு வாங்கி, நடுமுதுகுல நாமேளே சொரிஞ்சுவிட்ட மாதிரி இருக்குங்கணா...


  • Blogger Comments
  • Facebook Comments

1 comments:

Item Reviewed: குருவி, சுறாவை மிஞ்சிய தலைவா - விமர்சனம் Rating: 5 Reviewed By: gg